Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்சார் கிடைச்சிருச்சி! கோடை விடுமுறைக்கு கலக்கல் படங்கள்!

இந்த மாதங்களில் வெளிவரவிருக்கும் படங்களில் பல சென்சார் பார்வையில் சிக்கி சான்றிதழுடன் வெளிவந்து விட்டன. அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் படங்களின் லிஸ்ட் இதோ,

கமல்ஹாசன், ஜெயராம், ஊர்வசி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ’உத்தமவில்லன்’. படத்திற்கு யு சான்றிதழ் பெற்று மே 1ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க விஜய் சங்கள் எடிட்டிங் செய்கிறார். படத்தை கமல் மற்றும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது.  ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “ வை ராஜா வை”. சென்சாரில் யூ சான்றிதழ் பெற்று 30% வரிவிலக்குடன், ஏப்ரல் 24ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, கெளதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். காமெடிக்கு விவேக் மற்றும் வில்லனாக டேனியல் பாலாஜியும் நடிக்கின்றனர். 3 படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷின் இரண்டாவது படம் மற்றும் கெளதம் கார்த்திக்கின் திருப்புமுனையாக ’வைராஜா வை’ இருக்கும் என எதிர்பார்க்கப்படும் படம்.

அடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவரவிருக்கும் ’காஞ்சனா-2’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி வெளியாகிறது. டாப்ஸி, நித்யாமேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.

நகைச்சுவை கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது “இந்தியா பாகிஸ்தான்”. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்க என்.ஆனந்த் இப்படத்தினை இயக்கியுள்ளார். படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிக்க ஸ்ரீ கிரீன் வெளியிட படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பிறந்த நாளான மே 1ல் அருண் விஜய்யின் ‘வா டீல்’ வெளியாகும் என்று அறிவித்துள்ளனர், மற்றும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு படம் “ரஜினி முருகன்”. இவ்விரண்டு படமுமே சென்சார் பார்வைக்கு விரைவில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோடைகால விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்கள் ஒரு சேர ரெடியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்