Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ - ‘அப்பாடக்கர்’ படத்தில் சிம்பு பாடல்!

சிம்புவின் படங்கள் வெளியாகி மூன்று வருடங்கள் ஆயினும் , அவரது குரலில் பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்து வருகின்றன. இவர் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடல் பாடி வருகிறார்.

சமீபத்தில் வெளியான சண்முகபாண்டியனின் ‘சகாப்தம்’ படத்தில் ‘அடியே… ரதியே…’ என்னும் பாடலை பாடியிருந்தார். தற்போது ஜெயம் ரவிக்காக ’அப்பாடக்கர்’ படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

 

ஜெயம் ரவி நடித்து வரும் படம் ‘அப்பாடக்கர்’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு இசை தமன் . இவருடைய இசையில் ‘குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ…’ என தொடங்கும் குத்துப்பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

ஏற்கனவே ஜெயம் ரவி நடித்து வரும் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் சிம்புவின் அப்பாவான டி.ராஜேந்தரின் வசனத்தை வைத்து ஒரு பாடலை உருவாக்கியிருந்து குறிப்பிடத்தக்கது. இதில் தன்னை கேலி பண்ணியதாக கூறி டி.ஆர், ஜெயம் ரவி மற்றும் அந்த படக்குழுவினர் மீது வழக்கு தொடர்ந்தார். இன்னும் இந்த வழக்கு முடிவடையாத நிலையில், ஜெயம் ரவி படத்திற்கு சிம்பு பாடி கொடுத்திருப்பது சினி உலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close