Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரெண்டான வாலு - மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்திருக்கிறார். விஜய் சந்தர் இயக்கி இருக்கிறார்.

படத்தின் ரிலீஸ் தேதி கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு தேதியாக அறிவிக்கப்பட்டு பின் மாற்றலாகி வருகிறது. இந்நிலையில் மே 1ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மே 9ம் தேதி ‘வாலு’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்குரிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. 2012ம் ஆண்டின் தீபாவளி சிறப்பாக வெளியானது ‘போடா போடி’. அதன் பிறகு ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில்  சிம்பு சிறப்பு தோற்றம் தான்.

எனவே இப்படத்தின் ரிலீஸ் எப்போது என அனைத்து தரப்பிலும் கேள்விகள் எழத்துவங்கி விட்டன. மேலும் சிம்புவே இப்படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதனையடுத்து போஸ்டர் வெளியீட்டையடுத்து ட்விட்டரில் #Vaalu என ட்ரெண்டாகியுள்ளது.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close