Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படத்தில் புகை, மது சார்ந்த ஒரு காட்சி கூட கிடையாது...

’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தையடுத்து ரேவ்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் அடுத்த படம் ‘கமர கட்டு’. ’சாட்டை’ யுவன் மற்றும் ‘கோலிசோடா’ ஸ்ரீராம், லக்‌ஷாராஜ், மனீஷா ஜித் நடித்துள்ளார்கள்.+2 முடித்து விட்டு கல்லூரி போகும் மாணவர்களுக்கு உண்டாகும் குழப்பங்கள் அதை சார்ந்த கதையாக ‘கமர கட்டு’ உருவாகியுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் ராம்கி ராமகிருஷணன் கூறுகையில், மாணவர்களை தவறாக சித்தரிக்கும் ஒரு காட்சி கூட படத்தில் கிடையாது. சிகரெட் புகைப்பது, குடிப்பது போன்ற காட்சிகள் ஏதும் இன்றி உருவாக்கப்பட்டுள்ளது.

'கமர கட்டு', படத்தின் படப்பிடிப்பின் போதே, பல வித்தியாசமான அனுபவங்களை நாங்கள் சந்தித்தோம், படம் வெளியான பிறகு அதே வித்தியாசமான அனுபவத்தை இப்படம் கொடுக்கும், என்றார் இயக்குநர் ராம்கி ராமகிருஷ்ணன். தணிக்கை சான்றிதழுக்காக காத்திருக்கும் 'கமர கட்டு வரும் மே மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close