Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மொட்டை மாடியில் கொலவெறி டீம்!

பாலாஜி மோகன் இயக்கத்தில் காஜல் அகர்வால் மற்றும் தனுஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கிவிட்டன. இந்நிலையிலையில் அடுத்த படமாக மீண்டும் விஐபி டீம் இணைந்துள்ளது.

எமி ஜாக்சன், சமந்தா என இரு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தை வேல்ராஜ் இயக்க உள்ளார்.விஐபி காம்போ துவக்கம் என காரில் பறந்த படி தனுஷும், அனிருத்தும் சமீபத்தில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் ஷேர் செய்தது குறிப்பிடத்தக்கது. 

இப்படத்தின் பாடல் எழுத ஃபாரின் லொகேஷன் பார்க்காமல், சிம்பிளாக மொட்டை மாடி சேட்டிங்கில் 'மாரி’ பட பாடல்களை உருவாக்கி இருக்கிறது தனுஷ்-அனிருத் காம்போ. வி.ஐ.பி இரண்டாம் பாகத்திலும் எல்லா பாடல்களையும் எழுதுகிறார் 'பொயட்’ தனுஷ். ஏற்கனவே இவர்கள் இருவர் காம்பினேஷனிலும் ‘3’, மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி ‘ படத்தின் படங்கள் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. கலைவெறியைக் காட்டு காட்டுனு காட்டுங்க ப்ரோ! 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close