Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு - சாஹசம் நாயகி குறித்து பிரசாந்த்!

வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார். இந்தியாவைச் சேர்ந்த அம்மாவுக்கும், இங்கிலாந்து நாட்டு அப்பாவுக்கும் பிறந்த 19 வயதே நிரம்பிய அமண்டா ஒரு ஆஸ்திரேலியா வாசி.

பிரஷாந்த் அமண்டா பற்றி கூறுகையில், ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு, அமண்டாவின் வரவு தமிழ் சினிமாவிற்கு புத்துணர்ச்சி என்றும், சாஹசம் படம் வெளியீட்டுக்கு பிறகு வெகுவாக பேசப்படும் கதாநாயகியாக மாறுவார் என்றும் அமண்டாவை பற்றி கூறியுள்ளார். 

பிரஷாந்த் அமண்டா நர்கிஸ் பக்ரி, நாசர், தம்பி ராமைய்யா, சோனுசூது, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரோபோ சங்கர், அபி சரவணன், துளசி, தேவதர்ஷினி,  என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் அருண்ராஜ் வர்மா. படத்திற்கு திரைக்கதை , வசனம் எழுதி தயாரிக்கிறார் தியாகராஜன். 

படம் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் பாடல்கள் மற்றும் டீஸர் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்