Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்து மகா சபாவிற்கு கமல் பதிலடி!

 ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பால்சந்தர், பூஜா குமார், அண்ட்ரியா, ஜெயராம், ஊர்வசி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘உத்தம வில்லன்’. படத்திற்கு இசை ஜிப்ரான். படத்தின் டிஸர், டிரெய்லர்கள் மற்றும் பாடல்கள் என வெளியாகி ஹிட்டடித்துள்ளது. 

இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் தரப்பு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது. படம் மே1ம் தேதி வெளியாக உள்ளது. எனினும் இந்து மகா சபா ’இரணியன் நாடகம்’ பாடலில் இந்து மதத்தை இழிவு படுத்தியுள்ளதாக கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு தற்போது கமல் பதிலளித்துள்ளார், அவர் கூறுகையில் , சென்சார் தரப்பு சான்றிதழ் அளித்த பிறகு எந்த தேவைக்காகவும் காட்சிகளை கத்தரிக்க முடியாது. மேலும் பழமையான கம்பர் எழுதிய வரிகளில் இருந்துதான் இதை எடுத்துள்ளோம். இதில் எவ்விடத்திலும் எந்த மதத்தையும் குறிக்கவில்லை எனகூறியுள்ளார். 

யாரு டைய மனதையும், உணர்வு களையும் புண்படுத்தும்படியாக ‘உத்தமவில்லன்’ படத்தில் எந்த காட்சியும் இடம்பெறவில்லை. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு நாடகக் கலைஞருக்கும், தற்கால கலைஞருக்கும் இடையேயான வாழ்க்கைப் பதிவு சார்ந்த படம். கண்டிப்பாக படம் திட்டமிட்டப்டி வெளியாகும் என தெரிவித்துள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close