Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஸியாகவே இருக்கும் ஜிப்ரான்!

“வாகை சூட வா” படத்தின் மூலம் அறிமுகமான இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான். முதல் படத்திலேயே விருதுகளை அள்ள அடுத்தடுத்து படங்கள் குவிய ஆரம்பித்தன. “வத்திக்குச்சி”,“ஜில்”, “திருமணம் என்னும் நிக்காஹ்” , விஸ்வரூபம்’ உள்ளிட்ட பல படங்களை இசையமைத்திருக்கிறார்.

மே 1ல் கமல்ஹாசன் நடிப்பில் “உத்தமவில்லன்” இவரின் இசையில் வெளியாகவிருக்கிறது. அடுத்தடுத்து விஸ்வரூபம்2 , பாபநாசம், உள்ளிட்ட கமல்ஹாசன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜிப்ரான்.

அடுத்ததாக “சென்னை சிங்கப்பூர்” படத்திற்கும் இசையமைக்கிறார். தொடர்ந்து, “போடா ஆண்டவனே என் பக்கம்” படத்திற்கும் இசையமைக்க சம்மதித்திருக்கிறார். கண்ணன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு நாயகனாகவும், பிசாசு பட நாயகி பிரயாகாவும் நடிக்கிறார். ‘ஜெயம் கொண்டான்’, ’கண்டேன் காதலை’,’சேட்டை’, ’’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’  உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

மே இறுதியில் சென்னையில் துவங்கவுள்ள இப்படத்திற்கான ஒளிப்பதிவை பி.ஜி.முத்தையா கவனிக்கிறார். மேலும் பாடல் காட்சிகளுக்காக படக்குழு 10 நாட்கள் கனடா செல்லவிருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்