Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விரைவில் ‘கோ-2’ !

’சண்டக்கோழி 2’, ‘விஸ்வரூபம்2’, ’காஞ்சனா 2’ என சமீப காலமாக அதிகரித்து வரும் பார்ட் 2 லிஸ்டில் அடுத்த படமாக இணைந்துள்ளது ஹிட்டான ‘கோ’ படம் . கேவி ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா நாயர், பியா உள்ளிட்டோர் நடிப்பில் பத்திரிகை மற்றும் அரசியல் சார்ந்த படமாக வெளியாகி விமர்சனம் கமர்ஷியல் என மெகா ஹிட்டான படம் ‘கோ’.

தற்போது இப்படத்தை ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் ‘கோ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் திட்டத்தில் உள்ளனர். இது குறித்து எல்ரெட் குமார் கூறுகையில் , “ எங்கள் நிறுவனத்தின் ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று வெகுவாய் ஒரு எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராய் பணி புரிந்துள்ள சரத் அவர்களின் கதையை கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னர் இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

ஒரு படத்தின் பார்ட் என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்று இல்லாமல் அந்தக் கதை அந்த தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது என்று யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது.

“ அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனகச்சிதமாய் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.  ‘கோ’ திரைப்படத்திற்கு அளித்த ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார் ஆர்,எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்