Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்பவே அன்லைக்!

ந்த ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி யின் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்துல இருந்திருந்தா... எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்கள் அக்கெளன்ட் ஆரம்பிச்சு, ‘Waiting for வாத்தியாரின் ‘எங்க வீட்டுப்பிள்ளை’னு ஸ்டேட்டஸ் போட்டு மாஸ் காட்டுவாங்க.

சிவாஜி ரசிகர்கள் ‘வசந்தமாளிகை 100 கோடிடா’னு ஸ்டேட்டஸ் போட்டு கதி கலங்க வெச்சிருப்பாங்க. இடையில ஜெய்சங்கர் ரசிகர்கள் ‘சி.ஐ.டி சங்கர்’ டிரெய்லரை ஷேர் பண்ணி மரண மாஸ்னு போட்டு கெத்து காட்டுவாங்க. இன்னொரு பக்கம் ஜெமினி கணேசன் ரசிகர்கள் Best romantic hero of this year னு ஸ்டேட்டஸ் போட்டு லைக்ஸ் வாங்குவாங்க. எம்.ஜி.ஆர் நடிச்ச ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் நல்லாவே இல்லைனு சிவாஜி ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் போங்கு காட்டினா, திடீர்னு முத்துராமன் ‘இந்தப் படம் மனநிலை சரி இல்லாதவங்களுக்கு மட்டும்தான் பிடிக்காது’னு ட்வீட் தட்ட அது வைரலாகும்.

இன்னொரு பக்கம் ரிலீஸ் ஆகியிருக்கிற ஒரு படத்தை 700 பேர் கொண்ட குழுவை வெச்சு ட்ரெண்டாக்கிவிட்டு, ‘குடியிருந்த கோயில் இஸ் ட்ரெண்டிங் நவ்’னு மிரட்டல் ஸ்டேட்டஸ் போட்டு மண்டை காயவிடுவாங்க. சிவாஜிக்கு பிரபு பிறந்தப்போ, குழந்தை பிரபு போட்டோவைப் போட்டு ‘குட்டித் திலகம்’னு ட்ரெண்டிங் க்ரியேட் பண்ணியிருப்பாங்க. இந்த குரூப் இப்பிடி இருந்தா இருக்கவே இருக்கே, ‘தெய்வகுத்தம் ஆயிடுச்சு’ குரூப்.

ஆக்சுவலா ‘சரஸ்வதி சபதம்’ ஒரு கொரியன் படத்துடைய காப்பி, ‘ரிக்‌ஷாகாரன்’ படத்துடைய பின்னணி இசை ஒரு ஸ்பானிஷ் படத்தில் இருந்து சுட்டது, ஜெமினி கணேசன் வெச்சிருக்கிற மண்புழு மீசை ஹாலிவுட் படத்தில இருந்து அபேஸ் பண்ணினதுனு படத்தை பார்ட் பார்ட்டா பிரிச்சு பாகத்தைக் குறிப்பானுங்க. இவங்களுக்கே இப்படினா, கௌபாய் தொப்பியைக் கழட்டாம திரிஞ்ச ஜெய்சங்கர் படங்கள் என்ன ஆகும்னு சொல்லத் தேவையில்லை.

இன்னொரு குரூப் இருக்காங்களே, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னால டைரக்டர் கொடுத்த இன்டர்வியூல இருந்து வார்த்தைகளை உருவி எடுத்து, சரமா தொடுத்து மீம்ஸ் க்ரியேட் பண்ணி படத்தையே காலி பண்ணிடுவாங்க. ‘பாசமலர்’ படத்தில் முஸ்லீம்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்காங்க, அந்தப் படத்தை தடை செய்யுங்கனு இன்னொரு குரூப் கொடியைத் தூக்கிட்டுக் கிளம்பும். எல்லா பக்கமும் அணையைக் கட்டுனா எப்படினு படத்துடைய டீமே தலையில கைய வெச்சுட்டுத் திரிஞ்சிருக்கும். படிக்கவே பயமா இருக்கில்ல... ‘படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணி கலெக்‌ஷன் பார்த்த கடைசித் தலைமுறை அவங்கதான்’னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவோம் வாங்க!

- பா.ஜான்ஸன்-

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

[X] Close