Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பூமியிலேயே சிறந்த மனிதர் அஜித் - ராணா அதிரடி பதில்!

’ஆரம்பம்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி. ராமாநாயுடு பேரன், நடிகர் வெங்கடேஷின் உறவுக்காரர், என பல முகங்கள் இருப்பினும் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸில் கைதேர்ந்தவர் என்பது இவரின் அடுத்தடுத்த முகங்கள். 

’ஆரம்பம்’ படத்தில் அஜித்தின் நண்பராக நடித்த ராணா அப்போதே அஜித் மிகவும் பண்புடையவர் எனக் கூறினார். சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின்  கேள்விகளுக்கு பதில் அளித்த ராணாவிடம் ரசிகர் ஒருவர் கோலிவுட்டில் உங்கள் மனம் கவர்ந்த நடிகர் யார் என கேள்வி கேட்டார். 

அதற்கு எனக்கு கோலிவுட்டில் பிடித்த நடிகர் அஜித். இந்த பூமியிலேயே மிகவும் சிறப்பான மனித ரஜித் எனவும் பதில் கூறியுள்ளார் ராணா. இந்த பதில் அஜித் ரசிகர்களை சற்றே உற்சாகமாக்கியுள்ளது. இவர் நடிப்பில் ‘ருத்ரமாதேவி’ மற்றும் ‘பாகுபலி’ என இரு படங்கள் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியாக உள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
[X] Close