Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொந்தளித்த ரசிகர்கள்! சமாதானப்படுத்திய தனுஷ்!!

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “அனேகன்”. படத்தினை நாளை தமிழ் புத்தாண்டு அன்று தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் ரசிகர்களை சமாதானப்படுத்தினார் தனுஷ்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ், அமைரா மற்றும் வில்லனாக கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அனேகன்”. சமீபத்தில் 50வது நாளைக் கடந்தது. இந்நிலையில் இப்படத்தில் தொலைக்காட்சி உரிமையை பெற்றிருந்த தொலைக்காட்சி நிறுவனம் இப்படத்தினை தமிழ் புத்தாண்டு அன்று ஒளிப்பரப்ப திட்டமிட்டு இருக்கிறது.

தனுஷ் ரசிகர்கள் இதனால் ஆத்திரமடைந்து சமுக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்புகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். மேலும் விருதுநகர் மாவட்ட தனுஷ் ரசிகர்கள் “ வன்மையாக கண்டிக்கிறோம். திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'அனேகன்' திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை கண்டிக்றோம். ரசிகர்களைத் தூண்டாதே! மனிதனாய் இருக்கிறோம். மிருகமாய் மாற்றாதே!” என்று போஸ்டர்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனுஷ் தன்னுடைய சமுகவளைதளத்தில், “ அனேகன் ஒளிபரப்பு குறித்து அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயாரிப்பு நிறுவனத்திற்கும், தொலைக்காட்சிக்குமான ஒப்பந்தம் என்னவென்று எனக்கு தெரியாது. நான் கருத்துக் கூறமுடியாது. மேலும் படம் வெற்றி பெற்றுவிட்டது அது தான் முக்கியம். படம் ஒளிபரப்பப்பட்டால் இன்னும் அதிகமான ரசிகர்கள் பார்ப்பார்கள்” என்று ரசிகர்களை அமைதிப் படுத்தியுள்ளார் தனுஷ்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close