Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாலியே ஜோலியாய்!

மினிமலிசம்’ -  சுருங்கச் சொல்லிப் புரியவைப்பது. தமிழ் சினிமா குறித்த மினிமலிச போஸ்டர்களை உருவாக்கி கலக்கிவரும் ஆனந்த், ரானக், கார்த்திகேயன், அடுத்த கட்டமாகப் புதிய வகை மினிமலிச போஸ்டர்களை உருவாக்கிவருகிறார்கள். ‘டி.ஆர் சயின்ஸ் ஃபிக்‌ஷன் எடுத்தால் எப்படி இருக்கும்?’, ‘கௌதம் மேனன் ஹாலிவுட் படம் எடுத்தால் எப்படி இருக்கும்?’ என்று  கட்டுரையாக வரக்கூடிய விஷயங்களையே மினிமலிச போஸ்டர்களாக உருவாக்கும் இவர்கள், இதையே பிசினஸாகவும் மாற்றி இருக்கிறார்கள்.

‘‘இந்த கான்செப்ட் தமிழுக்கு தான் புதுசு. ஹாலிவுட், பாலிவுட்ல ஏற்கெனவே இருக்கு. ‘இன்டர்ஸ்டெல்லர்’ படத்தை தமிழ் இயக்குநர்கள் இயக்கியிருந்தா, எப்படி இருக்கும்னு நான் ஐடியாவைச் சொன்னேன். மணிரத்னம் இயக்கினா, ‘மார்ஃபி நட்சத்திரம்’, கௌதம் மேனன் இயக்கினா ‘செர்டன் தாண்டி வருவாயா’னு படபடனு டைட்டில்களை ரானக் சொல்ல ஆரம்பிச்சான், கார்த்திக் அதுக்கு ஏத்த மாதிரி டிசைன் உருவாக்கினான்” என்கிறார் ஆனந்த்.

“எல்லாப் படமும் பாத்திடுவோம். படம் பார்க்கிறப்பவே எந்த விஷயம் அந்தப் படத்துக்கான ஐகானா இருக்குங்கிறதைப் பிடிச்சிடுவோம். வந்து உக்காந்தா, 10 நிமிஷத்துல மினிமல் ரெடி ஆகிடும். ‘மங்காத்தா’வுக்கு மினிமல் ரெடி பண்ணப்போ, வெங்கட்பிரபு சார் அதை ட்வீட் பண்ணி நல்லாயிருக்குனு சொல்லியிருந்தார். இது மாதிரி சில இயக்குநர்கள் வாழ்த்துவாங்க.

இந்த மினிமல் பண்ணலாம்னு ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல வேலையை விட்டுட்டோம். இவ்வளவு நாள் ஜாலிக்காகப் பண்ணிட்டிருந்தோம். இனி இதையே ஜோலியா பண்ணப்போறோம். இப்போ நிறைய பேர் இந்த போஸ்டர் எங்கே விற்கிறீங்க, இதோட டீஷர்ட் இருக்கான்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதனால கூடிய சீக்கிரமே ஒரு ஸ்டோர் ஆரம்பிச்சு சேல்ஸ் பண்ணலாம்னு ஐடியாவில இருக்கோம்” என்கிறார்கள். கலக்குங்க ப்ரோஸ்...! -

பா.ஜான்சன்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்