Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜீவன் , சமுத்திரகனி நடிக்கும் ‘அதிபர்’

ஜீவன் கதாநாயகனாகவும் ,கதாநாயகியாக வித்யா நடிக்கும் புதிய படத்திற்கு ‘அதிபர்’ என பெயெரிட்டுள்ளனர். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, ரேணுகா, கோவை சரளா, ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை “மாயி, திவான், மாணிக்கம்” போன்ற படங்களை இயக்கிய சூரியபிரகாஷ் இப்படத்தை இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது, “செத்தாலும் யாருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்ய மாட்டேன் என்று வாழ்க்கையை வகுத்துக் கொண்டு வாழும் ‘சிவா’ என்ற கதாபாத்திரத்தில் ஜீவன். நம்பிக்கைத் துரோகத்தையே நிரந்தர தொழிலாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ‘ஈஸ்வரன்’ கதாபாத்திரத்தில் ரஞ்சித். இருவருக்குள்ளும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சென்னை, பாண்டிச்சேரி, மலேசியா, பாங்காக், லங்காவி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது,” என்கிறார் சூரியபிரகாஷ்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close