Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காயங்களை மறைத்த சமந்தா!

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக “பத்து எண்றதுக்குள்ள” படத்தில் நடித்துவருகிறார் சமந்தா. அதுமட்டுமில்லாமல் தமிழில் மட்டும் மூன்று படங்களில் பிஸியாக இருக்கிறார்.

பத்து எண்றதுகுள்ள படத்தின் படப்பிடிப்பு நேபாள நாட்டில் நடைபெற்றுவருகிறது. அதில் சமந்தா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு கதாப்பாத்திரத்தில் நேபாள நாட்டு கிராமத்து பெண்ணாக நடித்துவருகிறார்.

அதில் சமந்தாவுக்கு தனியாக ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கிறதாம். அப்போது சண்டைக் காட்சியில் சமந்தா டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். அப்போது அவரின் வலது கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்.

பின்னர் சமந்தா,“ நடிக்கும் போது காயங்கள் வரத்தான் செய்யும். ’நோ பெயின் நோ கெயின் ’ என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்திருக்கிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா- அல்லுஅர்ஜூன் நடிப்பில் ’சன் ஆஃப் சத்தியமூர்த்தி’ வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது.

இது மட்டுமின்றி விஜய்யின் 59வது படம், சூர்யாவுடன் ‘24’ மற்றும் தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி’ படக்குழுவுடன் அடுத்த படம் என இந்த வருடம் செம பிசியாக இருக்கிறார் நம்ம செல்ஃபி புள்ள. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்