Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போலீஸாக நடிக்கும் ராஜேந்திரன்!

 ’நான் கடவுள்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி ‘வேலாயுதம்’, ‘உத்தம புத்திரன்’ உள்ளிட்ட படங்க்ளில் வில்லனாக நடித்து பின் ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘டார்லிங்’ , ’இவனுக்கு தண்ணில கண்டம்’ உள்ளிட்ட படங்களில் காமெடியனாக கலக்கிய ராஜேந்திரனுக்கு இப்போது படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டன. 

அதிலும் பல படங்களில் ராஜேந்திரனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள், ஓபனிங் மாஸ் சீன் என ரஜேந்திரனை முக்கியத்துவப்படுத்தும் காட்சிகள் அதிகமாக இடம்பெற துவங்கிவிட்டன. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படமான ‘மாஸ்’ படத்தில் கூட ராஜேந்திரனுக்கு பில்டப்பான மாஸ் ஓபனிங் சீன்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்போது அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி , த்ரிஷா, அஞ்சலி நடிக்கும் படமான ‘அப்பாடக்கரு’ படத்தில் ராஜேந்திரன் போலீசாக நடிக்கிறாராம். சிறப்பு தோற்றத்தில் வர இருப்பதாக இருந்த ராஜெந்திரன் ‘டார்லிங்’, மற்றும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படங்களின் வரவேற்பால் தற்போது அதிகாம சில காட்சிகள் ராஜேந்திரனுக்காக சேர்த்துள்ளனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close