Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கொல்கத்தா செல்கிறது தல 56 டீம்!

'முரட்டுக்காளை" ஸ்டையிலில் அண்ணன் தம்பிகள் பாசத்தை 'வீரம்" படத்தில் பங்கு வைத்தார், இயக்குநர் சிவா. இப்போது 'பாசமலர்" ரேஞ்சுக்கு அண்ணன் தங்கை கதையை கையில் எடுத்து இருக்கிறார்.

நாயகி வேஷத்துக்காக நீ நான் என போட்டி போடும் நாயகிகள் மத்தியில்,  தலை குப்புற தோப்புக்கரனம் போட்டுப் பார்த்தும் தங்கை கேரக்டருக்கு யாரும் முன்வரவில்லை. போட்டிகளுக்கு இடையில் ஸ்மைல் காட்டி ஸ்ருதிஹாசன் ஹீரோயின் சான்ஸை லபக்கிக் கொண்டார்.

இந்தப்பட வாய்ப்புக்காகத்தான் கார்த்தியின் ஜோடியாக நடிக்கவிருந்த தெலுங்கு படத்தில் இருந்து கழன்று கொண்டார், ஸ்ருதி.  என்ன யோசித்தாலும் இன்னமும் தங்கை கேரக்டருக்கு ஆள் கிடைக்காமல் அலைகிரது படக்குழு.

இந்த படத்தில் அஜித்தின் பின்புலம் முழுக்க முழுக்க கொல்கத்தாவில் நடக்கிறது எனவே  மம்தாபேனர்ஜியின் மண்ணுக்கு படை எடுத்து இருக்கிறார், சிவா. விரைவில் நம்ம ஊர் ரசகுல்லா ஸ்ருதிஹாசனுடன் கொல்கத்தா போகவிருக்கிறார் தல ப்ளஸ் சிவா யூனிட்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close