Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நயன்தாரா ஏன் டாப் ஹீரோயின்?

ஒரே நேரத்தில் ஹோம்லியான கெட்டப், பக்கத்து வீட்டு பெண் வேடம், கேங்ஸ்டர் டீமில் ஸ்டைலிஷான கிளாமர் கேர்ள், என எந்த ரோலையும் சவாலாக எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார் நயன்தாரா . எந்த கேரக்டரிலும் அசால்ட்டாக எடுத்துக் கொண்டு நடிப்பதாலேயே நயன்தாரா தமிழின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பது குறிப்பிடத்தது. மேலும் முன்னணி நடிகையாக வலம் வரும் வேளையில் எந்த ஹீரோயினும் சற்றே யோசிக்கும் பாத்திரம் அம்மாவாக நடிப்பது. 

அதையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு சீதாவாக ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். பின் ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘நண்பேன்டா’ என யூத் லவ் கேர்ள் வேடம். பின் மீண்டும் இப்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தில் நடுத்தர வயது பெண்ணாக நடித்திருக்கிறார். 

இந்த படத்தில் நயன்தாராவிற்கு திருமணமாகி 8 வயதில் குழந்தை இருக்கிறதாம். மேலும் வீட்டிலேயே ஹோம் மேட் சாக்லேட் தயாரித்து விற்கும் பாத்திரமாம். ஜோதிகாவே திருமணமாகி பல வருடங்கள் கழித்துதான் நடுத்தர வயது பெண் பாத்திரத்திற்கு மாறியுள்ளார். ஆனால் முன்னணி நடிகையாக இருக்கும் தருணத்திலேயே நடுத்தர வயது பெண் வேடத்தில் நடிப்பது என்பது ஆச்சர்யமான விஷயம். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்