Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 கோடியில் பிரம்மாண்ட விஜய் பாடல்

 சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், நந்திதா, ஸ்ரீதேவி , சுதீப் நடிப்பில் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆந்திராவில் நடந்து வருகிறது. 

இப்படத்தின் விஜய் ஓபனிங் பாடல் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. 100 நடனக் கலைஞர்கள் மத்தியில் விஜய்யுடன் , முக்கியஸ்தர் ஒருவரும் நடனம் ஆட இருக்கிறாராம். அவர் யார் என்பது இப்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாண்ட கிராமத்தி செட்டிங்கில் இந்த பாடலுக்காக முத்துராஜ் உருவாக்கியிருக்கிறார். இப்படல் காட்சிக்கான செட் அமைப்பில் மட்டும் 200 பணியாட்கள் பணியாற்றி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு விஜய் அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் ஒரு கானா பாடலும் பாடப்போகிறார் விஜய். அப்போ ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’  பார்ட் 2 ரெடியாகுதா? 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்