Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலி ரிலீஸ் தேதி?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது தலக்கோணம் அருவிப் பகுதியில் நடந்து வருகிறது.

ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி, நந்திதா, சுதீப் நடிக்கும் இந்தப் படத்தை விஜய்யின் பிறந்தநாளில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் இனி பண்டிகை காலங்களில் என வருடத்தில் பத்து நாட்கள் மட்டுமே என அறிவிக்கப்பட்டதால் தற்போது பல படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு வருகின்றன. அதேவேளை படத்தின் பிரமாண்டம் கருதி இன்னும் படப்பிடிப்புகள் முடிவடையாமல் உள்ளதும் இன்னொரு காரணம்.

 

 
அந்த வகையில் இப்போது ‘புலி’ படமும் விடுமுறை தினத்தில் இணைந்துள்ளது. சமீபத்திய தகவல், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று படம் வெளிவருகிறது என நெருங்கிய வட்டங்கள் தெரிவித்துள்ளன.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துவரும் இந்தப் படத்துக்கு நட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சிம்புதேவனின் வழக்கமான ஃபேண்டஸி ஃபார்முலாவில் படம் தயாராகி வருகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close