Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் தங்கையாக லெட்சுமிமேனன்?

அஜித் நடிக்கவிருக்கும் 56வது படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக லெட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார்.

அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறதாம் படம். அஜித்துக்கு தங்கையாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற தேடுதல் வேட்டை நடைபெற்றது. மேலும் படத்தில் தங்கை வேடம் தான் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராம். இந்த பாத்திரத்திற்கு நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா போன்றவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்தது. இறுதியில் இப்படத்தில் லெட்சுமி மேனனிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதுகுறித்து லட்சுமி மேனன் கூறுகையில், ஆம் அந்த வேடத்தில் நடிக்க என்னிடம் கேட்டார்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரம் என் முடிவை சொல்ல இயலாது. படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகே முடிவை சொல்ல இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.  

ஸ்ருதிஹாசன் நாயகியாகவும், அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. ’என்னை அறிந்தால்’ தயாரித்த எ.எம்.ரத்னம் இப்படத்தினையும் தயாரிக்கிறார். அடுத்தமாதம் கொல்கத்தாவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close