Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விக்ரம் பிறந்தநாள் சிறப்பு ’10 எண்றதுக்குள்ள’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

கோலிசோடா வெற்றிப்படத்தைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் படம் “ 10 எண்றதுக்குள்ள”.  விக்ரம் பிறந்த நாளான இன்று படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் விக்ரம் லாரி டிரைவராக நடிக்கிறார். சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு லாரியில் செல்லும் டிரைவர் சந்திக்கும் பிரச்னைகள் தான் இப்படத்தின் ஒன் லைன்.

அதிகப்படியான காட்சிகள் நேஷனல் ஹைவேக்களில் தான் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. சில கார் ரேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கோவையில் படமாக்கப்பட்டன. பின்னர் நேபாளத்திலும் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன.

வில்லனாக பசுபதி, ஜாக்கி ஷெராப் இருவரும் நடிக்கின்றனர். மேலும் தெலுங்கு பர்னிங் ஸ்டார் சம்பூர்ணேஷ் பாபு சில காட்சிகளில் நடிக்கிறார்.

சமந்தா இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்பது கூடுதல் செய்தி. அதில் ஒரு வேடத்தில் நேபாளப் பெண்ணாகவும் நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தினை தயாரித்து வருகிறார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்