Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படித்த பள்ளிகளை தேடிப் போகும் தமிழ் சினிமா - தனுஷ் லிஸ்ட்டில் பாண்டிராஜ்

’பசங்க’, ‘மெரினா’ படங்களைப் போல் மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து பாண்டிராஜ் ‘ஹைக்கூ’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் படம் உருவாகி வருகிறது.

குழந்தைகளை மட்டுமே மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை தான் படித்த பள்ளியான இராமநாதபுரம் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் எடுத்துள்ளார்.

இந்த ஒரு காட்சியில் மட்டும் 1500 மாணவர்கள் சூழ படமாக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே தற்போது ‘ஹைக்கூ’ படம் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே படமும் சிம்பு படம் வெளியாகும் முன்பே வெளியாகலாம் என எதிரொபார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close