Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரேஸ் வீரராக அருண் விஜய்

 சிவ ஞானம் இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘வா டீல்’ . இப்படத்திற்கு இசை தமன். இப்படத்தின் அறிவிப்பு 2012ம் ஆண்டிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது. 

‘என்னை அறிந்தால்’ படம் கொடுத்த பெயர் , தற்போது ரசிகர்கள் மத்தியில் அருண் விஜய் விக்டராக பிரபலமாகிவிட்டார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டாடினர். 

இப்படத்தில் முன்பாதி முழுவதும் சாதரண யூத் பையனாக வரும் அருண் விஜய் இரண்டாம் பாதியில் ரேஸ் வீரராக வருகிறாராம். இப்படம் வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. எனினும் அதே நாளில் கமலின் ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் இப்படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப்போடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நிறைய படங்கள் மே 1ம் தேதி வெளியாக இருப்பதால் ’வா டீல்’ படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close