Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகள் அறக்கட்டளை துவங்கினார் பா.ரஞ்சித்!

 ’அட்டக்கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வட சென்னையையும் அங்கு வாழும் மக்களின் பிரச்சனையையும் மையமாக கொண்டு ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார். இப்படம் சென்ற வருடத்தின் சிறந்த படங்கள் லிஸ்டில் இணைந்தது. 

தற்போது ஏழைக் குழந்தைகளுக்காக அறக்கட்டளைகள் அமைக்கும் எண்ணத்தில் இருக்கும் பா.ரஞ்சித் முதற்கட்டமாக சென்னை வியாசர்பாடியில் முதல் அறக்கட்டளையை நிறுவி இருக்கிறார். 10 முதல் 15 வயதுள்ள 100 குழந்தைகளுக்கு டான்ஸ், ஓவியம், கராத்தே, குங்ஃபூ உள்ளிட்ட கலைகள் இலவசமாக கற்றுத்தரப்படுகின்றன. 

திறமை வாய்ந்த கலைஞர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிரது. மேலும் இதை பெரிய அளவில் பெருக்கி தனது நண்பர்கள் மற்றும் இதில் ஆர்வமுள்ளவர்களை பயன்படுத்த இருக்கிறார். மேலும் தமிழ் நாடு முழுவதும் இந்த அறக்கட்டளையை நிறுவும் திட்டத்தில் இருக்கிறார் ரஞ்சித். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close