Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மே 15ல் வரிசை கட்டும் படங்கள் !

மே மாதம் விடுமுறை என்பதால் தமிழ் சினிமாவில் பல முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் வரிசையாக ரிலீஸ்க்கு தயாராகி விட்டன. ஏற்கனவே மே 1ல் ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘வை ராஜா வை’ என களமிறங்கும் நிலையில் அடுத்ததாக மே 15ல் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “மாஸ்”. நயந்தாரா, ப்ரனிதா, ஜெயராம், பிரேம்ஜி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க, யுவன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 



மே 1ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் முடியாததாலும் அதே தேதியில் பெரிய படங்களின் ஏற்கனவே தியேட்டர் புக்கிங்குகள் நிரவாலும் மே 15ல் ரிலீஸ் ஆகிறது. படம் வெளியீடு குறித்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

தொடர்ந்து, இதே நாளில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள “புறம்போக்கு” படமும் மே-15ல் வெளியாகிறது. இப்போது புதிய செய்தியாக இந்த மே 15ஐ ஆக்கிரமித்திருக்கிறது ஜெயம் ரவி , ஹன்சிகா , மற்றும் பூனம் பஜ்வா நடித்த ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்திற்கு இசை டி.இமான். 

இந்த நாளிலேயே ஹாலிவுட் படங்களான ‘பிச் பெர்ஃபெக்ட்’ மற்றும் மேட் மேக்ஸ்- ஃபியூரி ரோட்’, மற்றும் இந்தியில் ’பாம்பே வெல்வெட்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close