Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் கமல் ஜோடியாக த்ரிஷா?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பாலசந்தர், பூஜா குமார், ஊர்வசி, பார்வதி , ஆண்ட்ரியா, ஜெயராம், உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியாக உள்ள படம் ‘உத்தம வில்லன்’.  இது தவிர்த்து ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம்2’ உள்ளிட்ட படங்களும் பெரும்பாலும் நிறைவை எட்டிவிட்டன.

இந்நிலையில் அடுத்த படமாக ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தை ராஜேஷ் இயக்க இருக்கிறார். அவருக்கு இணை இயக்குநராக கமல் பணியாற்ற இருக்கிறார். படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது. படத்திற்கு ’ஓர் இரவு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

படத்தில் கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ’மன்மதன்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்தவர் தற்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் ‘என்னை அறிந்தால்’ ஹேமானிகா கேரக்டரில் அனைவரின் பாராட்டுகளை அள்ளியவர் தற்போது உலகநாயகனின் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close