Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காதல் வந்திடுச்சு

தும்மலும் விக்கலும் எப்போ எப்படி வரும்னு சொல்ல முடியாது பாஸ். ஆனால் தமிழ் சினிமாவுல எது எதுக்கெல்லாம் காதல் வரும்னு கரெக்ட்டா சொல்ல முடியும். எப்படினு கேட்கிறீங்களா?

 

 சேலை கட்டத் தெரியலைனு ஹீரோ நம்ம ஹீரோயினை சபையில வெச்சு அசிங்கப்படுத்திட்டா, வீட்டுக்குப் போய் மெத்தையில குப்புறப்படுத்துக் காதலை ஸ்டார்ட் பண்ணுமே சாமி! எத்தனை வாட்டி?

 ‘பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?’னு நாலு அன்ரூல்டு பேப்பர்ல இருக்கிற டயலாக்கைப் பேசினா, பச்சக்னு காதல் ஒட்டிக்குமே மக்கா! துப்பட்டா சைக்கிள்ல சிக்கிட்டா... அதை வெட்டிப்பய எடுத்துவிட்டுட்டா, ‘லாலா லாலா லாலா’ தானேபா! ஏன்ன்ன்?

 ஹீரோயினுக்காக எவன் எவன்கிட்டவோ ஹீரோ அடி வாங்கினா, செமையா ஹீரோயினுக்கு லவ் வரும் பாருங்க. ஆஸம்!

 அவ கன்னத்துல பொளேர்னு இவன் அறைவிட்டா, கபால்னு காதல் பத்திக்கும். மைண்ட் ப்ளோயிங்! பட்டணத்துல படிச்சிட்டு வந்து ஊரையே அடிமையா வெச்சிருக்கிற முரட்டுப்பொண்ணுக்குதான், உடனே ஏழை ஹீரோ மேல லவ் வரும். ஸ்ஸ்ஸ்ஸ்... யப்பா!

 தன்னைக் கடத்திட்டுப்போனா சும்மா இருக்காம, கடத்தினவன் மேலே கன்னாபின்னானு காதல் வருமே. யாத்தே!

பாத்ரூம்ல லாக் பண்ணாம குளிக்கிறதை அந்தப் பக்கமாப் போறப்போ பார்த்துட்டா, ‘கடவுளே கடவுளே’னு வியர்க்க விறுவிறுக்க லவ் பண்ணுவாங்களேப்பா. கண்ணு ஃபியூஸா போயிடாது?

 கொஞ்சம் மப்பு ஓவராப் போய் ரெண்டு பேரும் வைக்கோல் போர்ல தப்புப் பண்ணிட்டா, அவனை திருத்துறதுக்காகவே சின்சியராய் லவ் பண்ணித் தொலைக்குமே பொண்ணு. பண்பாட்டுத் தமிழச்சி!

 தன்னை ஈவ் டீசிங் பண்ணின ஆள் மேல ஒரு கட்டத்துல வம்படியா பீறிட்டு வருமே காதல் நயாகரா. என்னமோ போம்மா!

 ஹீரோவுக்கு வில்லன் வீட்டுப் பொண்ணு மேல அவசியம் லவ் வரும். வராட்டினா, டைரக்டரை வரட்டியால அடிங்கஜி!

- ஆர்.சரண்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

[X] Close