Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நயன்தாரா, ஹன்சிகா, த்ரிஷா, அஞ்சலியைத் தொடர்ந்து லட்சுமி மேனன்!

 ஜெயம் ரவி ஒருவர் தான் சமீபத்தில் கோலிவுட்டின் ஹாட் டாப் நடிகைகளுடன் ஒரே நேரத்தில் நடித்து வரும் ஹீரோ. ‘பூலோகம்’, படத்தின் வெளியீடு தள்ளிப் போய்கொண்டிருக்கிறது எனினும் அதை ஈடுகட்ட ‘ரோமியோ ஜுலியட்’ ரெடியாகிவிட்டது. 

’ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஹன்சிகா ஜோடியாக ’ஜெயம்’ ரவி நடித்து வெளியாக உள்ளது. ’தனி ஒருவன்’ படத்தில் நயன்தாரா, ‘அப்பா டக்கரு’ படத்தில் த்ரிஷா , அஞ்சலி இப்படி தமிழில் முன்னணி நடிகைகளுடன் ஒரே நேரத்தில் ஜெயம் ரவி மட்டுமே நான் ரொம்ப பிசி பாணியில் நடித்து வருகிறார்.

இப்போது புதிய செய்தியாக ’நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க இருக்கிறார்.இந்த படம் ஜெயம் ரவியின் 19வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.  

இதுகுறித்து ட்விட்டரில் சக்தி சௌந்தர்ராஜன் ட்வீட் செய்துள்ளார். பெயரிடப்படாத புதிய படத்தில் ஜெயம் ரவியுன், லட்சுமி மேனனுன் இணைந்துள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என ட்வீட் செய்துள்ளார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close