Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்ருதி ஹாசன் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ்

கார்த்தி , நாகார்ஜுனா இணைந்து தமிழ் , மற்றும் தெலுங்கு இரு மொழியிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின் கால்ஷீட், புதிய படங்கள் ஒப்பந்தம் என ஸ்ருதி அப்படத்திலிருந்து விலகுவதாக மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியா ஸ்ருதி ஹாசன் மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் க்ரிமினர் மற்றும் சிவில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்த ஸ்ருதி தற்போது தான் விலகியதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் தன் மீதான தடையை நீக்கக்கோரியும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இப்பிரச்சனை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டொர் முன்னணியில் சுமூகமாக பேசி முடிக்கப்பட முடிவில் பிக்சர் ஹவுஸ் மீடியா ஸ்ருதி மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close