Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மொட்டை சிவா... சிரிப்பை அடக்க முடியலை!’’ - ராகவாவுக்கு விஜய் பாராட்டு

சென்னையில் மட்டும் தினமும் 30 தியேட்டர்களில் 'காஞ்சனா' ஹவுஸ்ஃபுல்லாக கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ் வீட்டு வாசலிலும் செம கூட்டமாம். இவர்கள் ரசிகர்கள் அல்ல; தயாரிப்பாளர்கள்.

10 கோடி பட்ஜெட்டில் 30 கோடி லாபம் ஈட்டியதன் விளைவு, ‘‘எங்களுக்குத்தான் உங்க அடுத்த முனி 4 படம்’’ என்று இப்போதே ராகவாவின் காலைக் கட்டுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். இதைவிட பெரிய சந்தோஷம் - ரஜினி போன்ற பல வி.வி.ஐ.பி.க்களிடம் இருந்தும் போன் மேல் போன் வந்து குவிகிறதாம்.

இதில் லேட்டஸ்ட்டாக ‘காஞ்சனா 2’ படத்தை, தனது குடும்பத்துடன் கண்டுகளித்துவிட்டு, ராகவாவை தனது வீட்டுக்கே வரவழைத்துப் பாராட்டித் தள்ளியவர் நடிகர் விஜய். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய், உடனே ராகவாவுக்கு போன் போட்டு, ‘‘வீட்டுக்கு வாங்களேன் நண்பா!’’ என்று செல்லமாய் ஆர்டரே போட்டு விட்டாராம்.

‘திருமலை’ காலத்தில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், ‘‘வாங்க... மொட்டை சிவா... அசத்திட்டீங்க! படம் பார்த்துட்டு என்னால இன்னும் சிரிப்பை அடக்க முடியலை!’’ என்று சிரித்துக்கொண்டே நண்பருக்கு விருந்து வைத்தாராம் விஜய்.

- தமிழ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close