Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இணையத்தில் பரவிவரும் புலி படத்தின் புகைப்படம்!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் புலி. படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானதால் வருத்தத்தில் இருக்கின்றனர் படக்குழுவினர்.

ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் சுதீப் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துவரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். ராஜா காலத்து கதையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டு வருகிறது. நட்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

காட்டுக்குள் படமாக்கப்பட்டு வரும் புலி படத்தின் கெட்டப்பில் விஜய் நடந்து வருவது போன்ற படம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால் படக்குழு படப்பிடிப்பை முடித்துவிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர், இசை வெளியிட  திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புலி படத்தில் நடித்து வரும் வித்யுலேகா ராமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ புலி படத்தின் படங்களை கள்ளத்தனமாக வெளியிட்டது எரிச்சலையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.  ஆறுமாத காலமாக பாதுகாத்து, இப்போது இப்படி நடப்பது கஷ்டமாக இருக்கிறது. ரசிகர்களுக்காக புலி படத்தின் பர்ஸ்ட் லுக் தயாராகிவருகிறது. இந்த நேரத்தில் இப்படி நடந்தது படக்குழுவிற்கு கஷ்டமாக இருப்பதாக தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close