Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீனாவா? கம்போடியாவா?....புலி டீமின் அடுத்த ப்ளான்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். மேலும் முதல்முறையாக விஜய் இந்த படத்தில் 3 அடியில் உயரம் குறைவாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஆந்திராவில் முடித்துவிட்டு திரும்பியுள்ளனர் படக்குழு. 


அடுத்தகட்ட படப்பிடிப்பாக இரண்டு பாடல்காட்சிகள் ஏப்ரல் 30ம் தேதிக்கு பிறகு படமாக்கப்பட உள்ளது. ஒரு பாடல் ஹான்சிகாவுடனும், மற்றொரு பாடல் ஸ்ருதி ஹாசனுடனும் படமாக்கப்பட உள்ளது. இதற்காக சீனாவா அல்லது கம்போடியாவா என திட்டத்தில் உள்ளனர்.



படத்தின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸும், கலை இயக்குநர் முத்துராஜும் சீனா சென்று இடங்களை தேர்வு செய்ய சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். சீனாவில் அதிக குளிர் என்பதால் படப்பிடிப்புக்கு அது ஏற்றதல்ல என தெரிவிக்க தற்போது கம்போடியா என முடிவாகியுள்ளது. 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close