Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நகை வடிவமைக்கும் தமன்னா

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஒரு ரவுண்டு வருகிறார் தமன்னா. தற்போது ராஜேஷின் வாசுவும் , சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நாயகியாகவும், கார்த்திக், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.  மேலும் தெலுங்கில் உருவகியுள்ள பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தமன்னா நகை வடிவமைப்பிலும் கைதேர்ந்தவர் என்பது மிகச்சிலருக்கே தெரியும்.

ஒயிட் & கோல்ட் என்ற தனது சொந்த இணையதளத்தில் பல நகை வடிவமைப்பாளர்கள் உட்பட தானும் நகைகளை உருவாக்கி இணையத்தில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார். அட்சய திரிதியையாக இன்று இந்த தளத்தை செயல்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளார் தமன்னா.

இது குறித்து தமன்னா கூறுகையில், எனது தந்தை நகை வியாபாரத்தில் இருப்பதால் சிறு வயதில் இருந்தே நகை வடிவமைப்பதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. முதலில் நான் வடிவமைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் எனது தன்னம்பிக்கை அதிகரித்தது. எனவே நகை வடிவமைக்கும் பணியை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இன்றைய பெண் தலைமுறையினருக்கு ஏற்றவாறு எனது வடிவமைப்புகள் இருக்கும். நான் வடிவமைக்கும் நகைகள் அழகாகவும், இக்காலத்திற்கு ஏற்றதாகவும், அனைத்து விழாக்களின் போது அணிந்து கொள்ளும் வகையிலும் இருக்கும் என்று கூறியுள்ளார் பளிச் பொண்ணு..

எடிட்டர் சாய்ஸ்

[X] Close