Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம்மரம் கடத்தியதாக வதந்தியில் சிக்கிய சரவணன்..

 ’நந்தா’, ’பருத்தி வீரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சரவணன். தற்போது ’சௌகார் பேட்டை’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். திடீர் செய்தியாக ஆந்திராவில் செம்மரக் கடத்தல் பிரச்சனையில் சரவணன் கைது என செய்திகள் பரவின.

இதுகுறித்து சரவணன் கூறுகையில், நான் சென்னையில் ‘சௌகார் பேட்டை’ படப்பிடிப்பில் இருக்கிறேன், ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி, சிங்கம் புலி, பவர் ஸ்டார் உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் எந்த கடத்தலிலும் ஈடுபடவில்லை என மீடியாவிற்கு தகவலும் மேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில்,  செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் தன்  பெயரை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். இதை விசாரிக்க கோரி அவர் இன்று காலை 11மணியளவில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க திட்டமிட்டுள்ளார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்