Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷுக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிகுமார்?

 வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் , ராதிகா சரத்குமார் நடிக்கும் ‘விஐபி’ டீமின் அடுத்த படத்தில் தற்போது புதிய செய்தியாக இயக்குநர் ‘கே.எஸ்.ரவிகுமார் இணைந்துள்ளார். 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ராதிகா சரத்குமார் தனுஷுக்கு அம்மாவாக நடிப்பதாகவும், மேலும் கே.எஸ்.ரவிகுமார் அப்பாவாக நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. 

எனினும் படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் என்பது குறித்து ரகசியமாகவே வைத்துள்ளனர் படக்குழுவினர். ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் சமுத்திரகனி தனுஷுக்கு அப்பாவாக நடித்தது குறிப்பிடத்தக்கது. 

அதே போல் தனுஷுக்கு மட்டுமே வித்யாசமான அப்பாக்கள் நடித்துள்ளனர், ’திருடா திருடி’ படத்தில் மாணிக்க விநாயகம், ’சுள்ளான்’ படத்தில் ’யாரடி நீ மோகினி’ படத்தில் ரகுவரன், ’படிக்காதவன்’ படத்தில் பிரதாப் போத்தன், ‘மாப்பிள்ளை’ படத்தில் ராஜா, அந்த வரிசையில் தற்போது கே.எஸ்.ரவிகுமார் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close