Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணிரத்னம் , தனுஷ் இணையும் அடுத்த படம்?

 மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் , பிரகாஷ் ராஜ், மற்றும் பலர் நடிப்பில் சென்ற வெள்ளியன்று வெளியான படம் ‘ஓ காதல் கண்மணி’. படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். சென்னை பாக்ஸ் ஆபிஸ் லிஸ்டில் ஹிட்டடித்திருக்கும் ‘ ஓ காதல் கண்மணி’ படத்திற்கு ஆதரவு தெரிவித்த மீடியா நண்பர்களுக்கு நன்றி கடிதமும் அனுபியிருந்தார் மணிரத்னம். 

இப்போது மணிரத்னத்தின் அடுத்த ப்ளான் என்ன என்பதே கோலிவுட்டின் அடுத்த கேள்வி.. அடுத்த படம் இந்தியில் எனவும் மேலும் படத்தின் ஹீரோவாக தனுஷ் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் ஒரு இந்தி மீடியாவிற்கு கொடுத்த பேட்டியில் மணிரத்னம் அடுத்து தான் ஒரு இந்தி படம் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். 

ஏற்கனவே தனுஷ் இரண்டு இந்தி படங்களில் நடித்து அப்படங்கள் இரண்டும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படம் இந்தி மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலும் ’உயிரே’ பாணியில் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close