Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி சொன்ன வெயில்... சம்மர் ஸ்பெஷல்

ரஜினியும், மேக்கப்மேன் முத்தப்பாவும் நெருங்கிய நண்பர்கள். அதாவது, இருவரும் நேரில் சந்தித்தால் கூலாங்கல்லை எடுத்து அடித்துக் கொள்கிற ரேஞ்சுக்கு குழந்தையாகி போவார்கள். 'அண்ணாமலை' படத்தில் ரஜினிக்கு கிளி ஜோசியம் பார்ப்பாரே அவர்தான் முத்தப்பா. இருவரும் விளையாடுவதை ஷூட்டிங் ஸ்பார்ட்டே கைதட்டி வேடிக்கை பார்த்து ரசிக்கும்.

அப்படித்தான் ஒருநாள் ஏ.வி.எம் கார்டனில் 'அதிசயப்பிறவி' படப்பிடிப்பு. மத்தியான உச்சிவெயிலில் ஷூட்டிங். ரஜினி நடித்துவிட்டு இடைவேளையில் சேரில் வந்து அமர்ந்தார். அப்போது அங்கே வந்த முத்தப்பா 'ஸ்... ஸ்... ரஜினி போன வருஷத்தோட, இந்த வருஷம் வெயில் ஜாஸ்திப்பா...' என்று அலுத்துக் கொண்டார்.

முத்தப்பா தோளைத் தொட்ட ரஜினி, 'முத்தப்பா வெயில் எப்போதும் போல அப்படியேதான் இருக்கு. உனக்குத்தான் போன வருஷத்தோட இந்த வருஷம் ஒரு வயசு ஜாஸ்தி. அதனால உன் உடம்புக்கு தாங்க முடியல...' என்று சொன்னார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close