Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினச்சம்பளம் கேட்கும் பவர் ஸ்டார்!

’ஐ’ உட்பட பல படங்களில் நடித்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் தற்போது புதிதாக நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்போது ‘சௌகார்பேட்டை’ படத்தில் மாதச் சம்பளம், வாரக்கூலி மாதிரி பவர் ஸ்டார் நடிக்கும் படங்களுக்கு தினசரி பட்டுவாடாவாக பணம் கேட்கிறாராம். ஏனென்றால், ஏற்கெனவே நடித்த பல படங்களுக்கு 20 நாள் கால்ஷீட் என்று வாங்கிக் கொண்டு, சின்ன தொகையை அட்வான்ஸாக கொடுத்து, மீதி பணத்துக்கு பெப்பே காட்டி விட்டார்களாம்.

அதனால்தான் அண்ணாத்தே இந்த அவசர முடிவை எடுத்து இருக்கிறாராம். படக் கம்பெனிகளுக்கு தகுந்த மாதிரி பணத்தை தீர்மானிக்கிறாராம்.

காலை 10 மனிக்கு ஷூட்டிங் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து போகும்போது பணம் தரவேண்டும் இல்லையென்றால் மறுநாள் படப்பிடிப்புக்கு அழைத்தால் கறாராக 'நோ' சொல்லி விடுகிறாராம். பவருக்கே பல்பா! 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close