Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சைக்குள்ளான பிரபல நகைக் கடை விளம்பரம்

ஏப்ரல் 17ம் தேதி கல்யாண் ஜுவல்லர்ஸ் தியாகராய நகரில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், நாகார்ஜுனா, ஷிவ்ராஜ் குமார், மஞ்சு வாரியர் . பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரம்மாண்டமாக நடந்தது. 

அதே நாளில் செய்தித் தாள்களிலும் சில போஸ்டர் விளம்பரங்கள் வெளியானது. அதில் ஐஸ்வர்யா ராய் பங்கு பெற்ற ஒரு புகைப்பட விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒரு மெத்தையில் நகைகள், விலையுயர்ந்த ஆடை அணிந்து அமர்ந்திருப்பது போலவும் மேலும் அவருக்கு பின்புறம் ஒரு கருப்பு நிற சிறுவன் ஏழ்மையான தோற்றத்தில் குடை பிடித்திருப்பது போலவும் வெளியானது. 

உலகமே இனப்பிரச்சனைகளின்றி மாறிவரும் நிலையில் இப்படி இனப்பிரிவினை மற்றும் இதற்கெல்லாம் மேல் குழந்தைத் தொழிலை ஊக்குவிப்பது போலவும் அந்த விளம்பரம் அமைந்துள்ளது என பல சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். 

ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு சமூக வலைகளில் கடிதங்களும் அனுப்பி வருகின்றனர். இந்தியாவின் முக்கிய பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சன் இப்படிப்பட்ட விளம்பரத்தை எப்படி ஊக்குவிக்கலாம். அதிலும் சமூக அமைப்புகளுக்கும், பணிகளுக்கும், அம்பாசிடராக இருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பில் நல்லெண்ன தூதராகவும் இருக்கும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் இமேஜையே இது பாதிக்குமே என கேள்விகளும் எழுப்பியுள்ளனர். 

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அந்த விளம்பர ஷூட் எடுக்கையில் நான் மட்டும் தான் இருந்தேன் உண்மையான புகைப்படம் இதுதான் எனவும் பதில் அளித்துள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன், கண்டிப்பாக இதுகுறித்து நான் சம்மந்தப்பட்ட வர்களிடம் பேசுகிறேன், மேலும் அந்த விளம்பரம் வெளியான தருணம் நான் சென்னையில் நகைக் கடை திறப்பு விழாவில் இருந்ததால் என்னால் தடுக்க இயலவில்லை, என்றவர் உண்மையான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

 இதனிடையே, இந்த விளம்பர படத்தை நீக்குவதாக கல்யாண் ஜுவலர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே பாணியில் உலகம் முழுக்க பல புகைப்படங்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவைகளும் இனப்பைரிவினையை காட்டுவதற்காக தடை செய்யப்பட்டவையே. அதில் சில, 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close