Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்டரை மீண்டும் இயக்கவிருக்கிறார் கெளதம் மேனன்!

அருண்விஜய்யை வைத்து அடுத்தப் படம் இயக்கபோவதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

அஜித், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’என்னை அறிந்தால்’. இப்படத்தின் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனும் ஹீரோவே. அந்த அளவிற்கு அஜித்துக்கு இணையான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அருண் விஜய்யின் இந்த கேரக்டர் அனைத்து மக்களிடமும் பாராட்டுகளை பெற்றது.

தொடர்ந்து, அருண்விஜய் நாயகனாக ’வா ’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கார்த்திகா ஜோடியாக நடிக்கிறார். ஆர்.ரத்தின சிவா இயக்கத்தில் தமன் இசையமைக்கிறார். இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் கெளதம் மேனன், “ அருண்விஜய் ஹீரோவாக வைத்து என்னுடைய அடுத்தப் படத்தினை இயக்குவேன்” என்று அறிவித்துள்ளார்.

சிம்பு, பல்லவி சுபாஷ் நடிப்பில் கெளதம் இயக்கிவரும் படம் “அச்சம் என்பது மடமையடா”. இப்படத்திற்குப் பிறகு அருண் விஜய்யை நடிக்கும் படத்தை கெளதம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close