Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கௌதம் மேனன், சிம்பு படத்தில் ராணா

’ஆரம்பம்’ கொடுத்த எண்ட்ரி ராணாவிற்கு இப்போது கோலிவுட்டில் அடிக்கடி வாய்ப்புகள் குவிய துவங்கி விட்டன. ஏற்கனவே தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பகுபலி’ , தமிழில் ’மகாபலி’ என்னும் பெயரில் வெளியாக உள்ளது.

இதுமட்டுமின்றி தமிழில் உருவாகும்  மலையாள ‘பெங்களூரு டேஸ்’ ரீமேக் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் , பல்லவி நடித்து வரும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’. 

‘என்னை அறிந்தால்’ படத்திற்காக இந்த படத்தை பாதியில் நிறுத்தி வைத்திருந்து இப்போது மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராணாவை சந்தித்த கௌதம் மேனன் படத்தின் கதை மற்றும் ராணாவின் ரோல் குறித்து விளக்கவே ராணாவும் ஓகே சொல்லிவிட்டாராம். எனவே அச்சம் என்பது மடமையடா படத்தில் ராணா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close