Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம் பிரபுவின் அடுத்த படம் ‘தனிக்காட்டு ராஜா’

 விக்ரம் பிரபுவின் அடுத்த படமாக இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘இது என்ன மாயம்’ . படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். மேலும் நவ்தீப், அம்பிகா, காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தை சரத்குமார், ராதிகா சரத்குமார் , லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் அடுத்த படமாக ஜி.என்.ஆர்.குமாரவேல் இயக்கத்தில் ‘வாகா’ என்னும் படத்திலும் நடித்து வருகிறார். 

இப்படத்தைத் தொடர்ந்து ’மஞ்சப்பை’ படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார் விக்ரம் பிரபு. இப்படத்திற்கு இசை இளையராஜா. 1982ம் ஆண்டு வெளியான ரஜினி படமான ‘தனிக்காட்டு ராஜா’ படத்தின் தலைப்பு இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ரஜினி, கமல் படங்களின் தலைப்புகள் அதிகம் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’, விஷாலின் ‘பாயும் புலி’ இப்போது ‘தனிக்காட்டு ராஜா’ என வரிசைக் கட்டத் துவங்கிவிட்டனர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close