Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே! ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க - கமல் சுவாரஸ்ய பதில்

சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் படத்தில் ரஜினியும், விக்ரமும் நடிக்க உள்ளனர். விக்ரமின் கேரக்டரில் முதலில் பேசப்பட்டவர் கமல். கமல் மறுத்ததாலேயே தற்போது அந்த பாத்திரம் விக்ரமிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஜினியும் , கமலும் இணைந்து நடித்த பல படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. எனினும் இந்த கூட்டணி இனி சேரவே சேராதா என ரசிகர்கள் மனதிலும் ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது. இதுகுறித்து சமீபத்தில் உலகநாயகனிடமே கேட்கப்பட்டது.அதற்கு கமலின் பதில் இதோ

'’ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே! ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க?''

கமல் பதில் : '’என்னத்துக்கு? எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்துட்டா, படத்தை எதை வெச்சு எடுக்கிறது? படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும்? யோசிங்க..! வருமானத்துல ஆசைப்படுபவர்கள் மட்டும்தான் இந்தக் கூட்டு முயற்சியில ஆர்வம் காட்டுவார்கள். வேணும்னா, ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஒரு படத்துல நடிக்கலாம். இதுக்காக ஏன் வர்த்தகரீதியா குழப்பத்தை உண்டாக்கணும்? எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும்? அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும்?

 

ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே! எங்களை ஒரு படத்துல சேர்ந்து பார்த்த சந்தோஷம் அவங்களுக்குக் கிடைச்சுருமே. படம் பூரா நாங்க சேர்ந்து நடிச்சு எந்தத் தியாகமும் பண்ண வேண்டியது இல்லை. இது எல்லாத்தையும்விட, நல்ல கதை வேணும். தேவை இல்லாம ரசிகர்கள் தியேட்டர்ல அடிச்சுக்கக் கூடாது. இது பத்திலாம் நாங்க ரெண்டு பேரும் பலமுறை பேசியிருக்கோம். ’கமல் 'மருதநாயகம்’ல நான் நடிச்சுக்கட்டுமா?'னு அவர் கேட்டார். 'என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க?'ன்னும் கேட்டிருக்கார். அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ,

'படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க.... நீங்க வராதீங்க கமல்’னு சிரிச்சுட்டே சொன்னார். இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல!''

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close