Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிரச்னை முடிந்தது... அதே கம்பெனியின் படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் நடனம்

பிவிபி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி திடீரென  விலகினார். இதனால் பிவிபி நிறுவனம் ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என வழக்கு தொடர்ந்தது. பின்னர் படத்தில் இருந்து விலகியதற்கு ஸ்ருதிஹாசன் காரணம் கூறி மனு ஒன்றை அளிக்க பட நிறுவனமும் ஸ்ருதிஹாசனும் சமரசம் பேசி வழக்கை வாபஸ் பெற்றனர்.

தற்போது பிவிபி நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படமான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் சுருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இப்படத்தை கே.எஸ்.பிரகாஷ் இயக்கிவருகிறார்.

 

இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாடல் ஒன்று இருக்கிறதாம். இந்த பாடலுக்கு ஒரு முன்னணி நடிகையை ஆட வைக்க முயற்சி நடந்தது. தற்போது ஸ்ருதிஹாசனே இந்த பாடலுக்கு நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. பிரச்னை ஏற்பட்ட நிறுவனத்துடனே மீண்டும் சமரசம் ஆகி ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தமாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close