Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்யின் ‘கத்தி’... இப்போது அக்‌ஷய் குமாரின் ’கப்பர் ஈஸ் பேக்’

க்ரிஷ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடிப்பில் தயாராகி உள்ள படம் கப்பர் ஈஸ் பேக் .மே மாதம் 1ம் தேதி திரைக்கு வர உள்ளது. அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் கரீனா கபூர் கான் தேரி மேரி கஹானி என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.

’கப்பர் ஈஸ் பேக் படம்’ ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ’ரமணா’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியாகியுள்ளது.

’கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெர்ஷனை உருவாக்கிய ஸ்கைடௌ ஸ்டூடியோ பிரவேட் லிமிடெட் நிறுவனமே இந்த கேமையும் உருவாக்கியுள்ளது. 3 லெவல்கள் உள்ள இந்த கேமில் முதல் லெவலில் ஒரு ஆபீஸ் அதனுள் யார் கண்ணிலும் படாமல் செல்ல வேண்டும். கண்ணில் பட்டு விட்டால் அலாரம் அடித்து விடும்.

அடுத்த லெவலில் சில சண்டை காட்சிகளுடன் மறைந்து சென்று இலக்கை அடைய வேண்டும். மூன்றாவது கார் ரேஸ். காரில் வேகமான சேஸிங் காட்சிகளுடன் டார்கெட்டை முடிக்க வேண்டும். இந்த கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். ஐஓஎஸ் சிஸ்டம்களுக்கு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close