Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரு கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த டி.ராஜேந்தர் ... ரோமியோ ஜூலியட் படத்திற்கு நெருக்கடி

 ஜெயம் ரவி , ஹன்சிகா, நடிப்பில் லக்‌ஷ்மன் இயக்கியுள்ள படம் ’ரோமியோ ஜுலியட்’. படத்திற்கு இசை டி.இமான். சில நாட்களுக்கு முன்பு டண்டனக்கா என்னும் பாடல் வெளியிடப்பட்டது. டி.ஆரின் வசனங்கள் கலவையில் அனிருத் பாடிய பாடலாக பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலை தடை செய்யக்கோரி டி.ஆர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. 

எனது தனித்துவமான நடிப்பு, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவை, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள "ரோமியோ ஜூலியட்' என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "டண்டனக்கா நக்கா நக்கா' என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதி, இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.

விளம்பர நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக்கள், வசனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. என்னுடையப் பேச்சுகள், வசனங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அது தொடர்பாக என்னிடம் அனுமதியும் பெறவில்லை.

எனது ரசிகனாக ஜெயம்ரவி இந்தப்படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனால், படம் முழுவதும் என்னைப் பற்றி அவதூறான காட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது. எனவே, "ரோமியோ ஜூலியட்' படம் வெளியாவதற்கு முன்பு சட்ட ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்து, படத்தின் காட்சிகள், வசனங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அவ்வாறு நியமிக்கவில்லையெனில் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளிலும் அந்தப் பாடலை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும்.

என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close