Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் இல்லாமல் படத்தின் க்ளைமாக்ஸ் இல்லை - ’வை ராஜா வை’ படம் குறித்து டாப்சி..

’வை ராஜா வை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த், டாப்சி , விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘வை ராஜா வை’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. மே 1ம் தேதி உழைப்பாளர் தின சிறப்பாக படம் வெளியாக உள்ளது. 

இப்படத்தின் புரமோஷன் கருதி நேற்று நடந்த பிரஸ் மீட்டில் டாப்சி தனது கேரக்டர் குறித்து பேசினார். ஒரு வருடம் கழித்து ‘காஞ்சனா 2’ மற்றும் ‘வை ராஜா வை’ படங்கள் மூலம் தமிழில் மீண்டும் களமிறங்கியிருக்கும் டாப்சி பேசுகையில், ‘வை ராஜா வை’ படம் என்னுடைய படமல்ல. 

நான் படத்தின் ஹீரோயினாகவோ, அல்லது ஹீரோயின் அளவிற்கு உள்ள பாத்திரத்திலோ நடிக்கவில்லை. எனினும் எனது கேரக்டர் தனித்துவமானது. சிறப்பு தோற்றம் தான் எனினும் நான் இல்லாமல் குறிப்பிட்ட சீனோ அல்லது க்ளைமாக்ஸோ படத்தில் இல்லை என்பது தான் இதில் ஹைலைட். 

முதல் முறையாக இந்த படத்தின் மூலம் கேசினோ விளையாடும் இடத்தின் அனுபவம் கிடைத்தது. கேசினோவில் எப்படி விளையாட வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. எனக்கு அதற்கு நேரமும் இல்லை. இந்த படத்தை பொருத்தமட்டில் எனக்கு ஐஸ்வர்யா தனுஷ் தான் டீச்சர். எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொடுத்தார். 

எனது ரோல் படத்தில் மிகவும் ஜாலியாக இருக்கும் , நான் கேசினோவின் செய்தி தொடர்பாளராக நடித்துள்ளேன். என கூறியவர் ஐஸ்வர்யா தனுஷ் குறித்து கூறுகையில் இயக்குநர்களில் ஆண் , பெண் சமமாக பார்க்க வேண்டும். எனக்கு மற்ற இயக்குநர்கள் போலதான் ஐஸ்வர்யாவும் தெரிந்தார். என கூறி வழக்கமான வெள்ளைப் புன்னகையை உதிர்த்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close