Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நட்டியின் அடுத்த படம்

 ’சதுரங்க வேட்டை’ ,’கதம் கதம்’ படங்களின் வெற்றியால் நட்ராஜ் ஒளிப்பதிவு மற்றும் நடிப்பு என இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரு கை பார்த்து வருகிறார். நட்ராஜை ஒரு பாடலிலாவது தலைகாட்டினால் கூட போதும் என்னும் அளவிற்கு நட்ராஜ் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். 

இந்நிலையில் நட்ராஜ் கையில் மட்டும் சுமார் 3க்கும் மேற்பட்ட படங்கள் இந்த வருடத்தில் ஹீரோவாக நடிக்க காத்திருப்பில் உள்ளன. பாலிவுட், கோலிவுட் என பிரபல கேமராமேனாக இருக்கும் நட்ராஜ் இப்போது விஜய்யின் ‘புலி’ படத்தின் ஒளிப்பதிவில் முழு விச்சில் வேலை செய்து வருகிறார். 

இடைவேளையில் பாண்டிராஜின் துணை இயக்குநர் ராமுவின் கதையை கேட்ட நட்ராஜ் கதை பிடித்துவிடவே ஓகே சொல்லிவிட்டாராம் நட்ராஜ். மேலும் படத்தின் இன்னொரு நாயகனாக ’மூடர் கூடம்’ ராஜாஜி நடிக்க இருக்கிறார். படத்திற்கு இசை ஜேம்ஸ் வசந்தன். மே மாதம் துவங்க உள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ’புலி’ படத்தின் நிறைவையடுத்து நட்ராஜ் மீண்டும் தான் நடிக்க வேண்டிய படங்களில் கவனம் செலுத்த உள்ளார். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close