Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளியானது ஃபர்ட்ஸ்ட் லுக்... ஜூன் 7ம் தேதி இசை- ரஜினி முருகன் அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் “ரஜினிமுருகன்” இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, இசை வெளியீடு மற்றும் படம் வெளீயீடு தேதிகளை படக்குழுவினர் முன்னரே அறிவித்துவிட்டனர்.

படத்தின் இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமான பட வெளியீட்டு தேதிகளை அறிவித்துள்ளார். இதன்படி, ஏப்ரல் 25ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடும், ஜூன் 7ம் தேதி இசை வெளியிடும், ஜுலை 17 ரம்ஜான் விடுமுறை நாளில் படம் வெளியிடப்படும் என்றும் அறிவித்தனர்.

பொதுவாக சிவாகர்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிக்கும் இப்படத்திற்கு இசை டி.இமான். விவேக் ஹர்ஷன் படத்திற்கு எடிட்டிங். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பொன்ராமின் அடுத்தப் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்